எரிவாயு தட்டுப்பாட்டின் விளைவு: விறகு விலையால் மக்கள் திண்டாட்டம்
சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை தொடர்ந்து விறகு,மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கும் நுவரெலியாவில் பாரிய தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் தோட்டம், நகரம், கிராமம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு அசௌரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
குளிர் பிரதேசம் என்பதால், இங்கு வாழும் மக்களுக்குச் சுடுநீர் தேவைப்பாடு அதிகமாகவே உள்ளது. விறகுத் தட்டுப்பாடு காரணமாக சிலர் சுடுதண்ணீரைப் பருகாமையால், தடிமன், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுகின்றனர்.
நுவரெலியா நகரில் உள்ள ஒரு சில சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில், எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்து கொண்டு, 300 முதல் 400 ரூபாய் வரை அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
நுவரெலியா நகரில் கடைகளில் மண்ணெண்ணெய் அடுப்புக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டு, அடுப்பின் விலை 8,500/= ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இங்கு வாழும் மக்கள், விறகு அடுப்புகள் உபயோகிக்கிற போதிலும் விறகு தேடுவதற்குக் காடுகளுக்குச் செல்ல முடியாது வனப்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் சுடு தண்ணீரின் தேவைக்கு மதிப்பளித்துச் சமையல் எரிவாயு,விறகு, மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடுகள் ஏற்படாது, மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam