இலங்கையின் புதிய வரி நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியம்
இலங்கை(Sri Lanka) அண்மையில் அறிவித்த புதிய வரி நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் மறுஆய்வு செய்யும் என்று அந்த நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் ஜூலி கோசாக்(Julie Kozack) தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இலங்கை தொடர்பான ஏற்பாட்டின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வில், சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் பணியாளர் நிலை ஒப்பந்தத்தை எட்டியதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
மதிப்பாய்வு முடிந்ததும் அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால், அது அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கைக்கு 333 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று கோசாக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இலங்கையின் தனிஆள் வருமானத்தின் வரி அமைப்பில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் அறிவித்தார்.
இந்த மாற்றங்களின்படி, வரி இல்லாத மாதாந்த வருமான வரம்பு 100,000 இலிருந்து 150,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |