நாணய நிதியத்துடன் நடக்கும் பேச்சுகளின் முன்னேற்றம் பற்றி பிரதமர் விளக்குவார்
சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று இதனை கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.அவை தொடர்பாக பிரதமர் விளக்குவார் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வாய்மொழி மூலமாக கேள்விகளுக்கு பதிலளிக்கும் சந்தர்ப்பத்தில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்க மறுத்துள்ளது என சர்வதேச புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹேன்க் தெரிவித்திருந்தார்.
இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் 16 நிகழ்ச்சித்திட்டங்களில் சம்பந்தப்பட்ட போதிலும் அதில் ஒன்றில் கூட இலங்கை வெற்றி பெறவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
