இலங்கைக்கு கிடைக்கவுள்ள 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்! இன்று நடைபெறும் கூட்டம்
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஐந்தாவது மற்றும் ஆறாவது கடன் தவணை வழங்குவதற்கான மீளாய்வுகள் இன்று (27) நடைபெற உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக்குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
700 மில்லியன் டொலர் நிதியுதவி
இதன் கீழ், இலங்கை சுமார் 700 மில்லியன் டொலர் நிதியுதவியைப் பெறும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய தரப்பினரைப் பாதுகாக்கும் அதே வேளையில், செலவினங்களை ஈடுசெய்யும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை மீளத்திருத்தியமைத்தல் இந்த மீளாய்வுக்கு ஒப்புதல் பெறுவதில் ஒரு முக்கிய நிபந்தனையாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜுலியா கொசெக் முன்னதாகக் வலியுறுத்தியிருந்தார்.
