திறைசேரி செயலாளர் இன்றி பேச்சுவார்த்தை: அதிருப்தியில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியக்குழு இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் திறைசேரியின் செயலாளர் அதில் பங்கேற்கவில்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று கூறுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கொழும்பில் 330 மில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பாக கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தியது.
நாணய நிதிய பிரதிநிதிகள்
எனினும் இரண்டாவது தவணைக் கொடுப்பனவுக்கான காலம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மாறாக வருமானம் திரட்டலில் இலங்கை இன்னும் முன்னேற வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறிவிட்டது.

இந்நிலையில் பேச்சுவார்த்தையின் போது, திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன சமுகமளிக்கவில்லை. இதன் காரணமாக, பிரதிநிதிகளுக்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை.
இதன்போதே திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன சீனாவில் இருப்பது தெரியவந்தது.
எனினும் தமது பயணம் உரிய அறிவிப்புக்களுடன் திட்டமிடப்பட்டதை இதன்போது சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri