இனபிரச்சினையை தீர்ப்பதற்கான தருணம் உருவாகியுள்ளது: ஜனாதிபதிக்கு அரவிந்தகுமார் புகழாரம்(Video)
இனபிரச்சினையை தீர்ப்பதற்கான தருணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் ஏற்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடிக்கு வருகைதந்த இராஜாங்க அமைச்சர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கை
மேலும் கருத்து தெரிவித்த அவர்,“சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்த பின்னர் ஏனைய நாடுகளின் நம்பிக்கையினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது.
அவர்களினால் தாமாக உதவி வழங்கும் சூழ்நிலையானது ஜனாதிபதியின் நடவடிக்கை காரணமாகவே கிடைத்தது.
இந்த நாடு மிக விரைவாகவும் துரிதமாகவும் பழைய நிலைமைக்கு திரும்பிவருகின்றது. அதற்கு வித்திட்டவர் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவே நான் வாக்களிப்பேன்.அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் எதிராகவே வாக்களிப்பேன். ஐஎம்எப் உதவிகள் வரவேற்ககூடியவையாகவுள்ளது.
முதல்கட்டமாக வழங்கிய தொகையானது எமது நாட்டின் தேவைக்கு போதுமானதாகயில்லாத நிலையிலே உள்ளது. இதனை வழங்குவதற்கு அவர்கள் முன்வைத்த நிபந்தனைகள் மிகவும் கடுமையானதாகவேயிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள்
அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே கடனுதவி வழங்கப்படும் என்பதில் ஐஎம்எப் உறுதியாகயிருந்தது.
அந்த நிபந்தனைகளை நிறைவு செய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கடனுதவியைப் பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு முக்கியத்துவமானதாகும்.
சர்வதேச நாடுகளுடன் அவருக்கு இருக்கும்
நல்லுறவு, அவரின் அனுபவமே இவற்றினை செய்யக்கூடியதாகயிருந்தது.”என தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 2 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
