சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.
இந்த பிரதிநிதிகள் குழு இன்றைய தினம் இரவு இலங்கை வருகை தர உள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நிலைமை குறித்து மதிப்பீடு
நாட்டின் அண்மைக்கால பொருளாதார நிலைமைகள் குறித்து இந்தக் குழுவினர் மதிப்பீடுகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவி வழங்கப்பட்டது முதல் இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் சந்திப்பு நடத்த உள்ளனர்.
அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ள பின்னணியில் இந்த விஜயம் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |