பொலிஸ் திணைக்களத்தின் முறைக்கேடான இடமாற்றங்கள்:சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆலோசனை
பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் முறைக்கேடான இடமாற்றங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த மே 09ம் திகதி நாடு தழுவிய ரீதியில் பல்வேறு அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என்பன சேதமாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.
மே 09 வன்முறை சம்பவங்கள்
குறித்த சம்பவங்களை தடுக்க தவறிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் தற்போது பொலிஸ் திணைக்களத்தினால் முறைக்கேடான வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, அண்மையில் இவ்வாறு ஒரே நேரத்தில் 23 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அரசியல்வாதிகளின் சொத்துக்களை பாதுகாக்க தவறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆலோசனை
இந்நிலையில் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் திறமையானவர்கள் மட்டுமன்றி பக்கச்சார்பற்றவர்கள் என்றும் பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள் மேற்கொள்ளும் தன்னிச்சையானதும் முறைக்கேடானதுமான இவ்வாறான இடமாற்றங்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் உயர் அதிகாரிகளும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.