சட்டவிரோத மதுபான விற்பனையாளரை காட்டிக்கொடுத்த ஆளும் தரப்பு உறுப்பினருக்கு நேர்ந்த கதி
சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக பிபில பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
மதுபானம் விற்பனை செய்த நபரால் தாக்கப்பட்டு காயமடைந்த உறுப்பினர், பிபில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர், பதியதலாவ டோரகும்புர பகுதியில் இயங்கிய சட்டவிரோத மதுபான விற்பனை நிலையம் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதை அறிந்ததும், குறித்த உறுப்பினரின் வீட்டிற்கு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தேகநபர் உறுப்பினரைத் தாக்கியுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு தப்பி ஓடிய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
