6 பந்துகளில் 6 சிக்ஸர்! புதிய சாதனை படைத்த வீரர்:வெளியான காணொளி
பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான கண்காட்சி போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் இஃப்திகார் அகமது 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
இதற்கமைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குவெட்டா கிளாடியேட்டர் அணி 184 ஓட்டங்களை குவித்தது. குவெட்டா கிளாடியேட்டர் அணி சார்பில் இப்திகார் அகமது 50 பந்துகளில் 94 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்துள்ளார்.
வாஹப் ரியாஸ் வீசிய ஓவரை சிதறடித்த அவர், ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டு அரங்கை அதிர வைத்துள்ளார்.
6⃣ 6⃣ 6⃣ 6⃣ 6⃣ 6⃣ ?
— Pakistan Cricket (@TheRealPCB) February 5, 2023
Iftikhar goes big in the final over of the innings! ?
Watch Live ➡️ https://t.co/xOrGZzkfvl pic.twitter.com/CDSMFoayoZ
இதனை தொடர்ந்து 185 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆடிய பெஷாவர் அணி 20 ஓவர்களில் 181 ஓட்டங்கள் பெற்றது.
இதன்மூலம் கிளாடியேட்டர்ஸ் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதிய வரலாற்று சாதனை
ஆறு சிக்ஸர்களை ஒரே ஓவரில் அடித்ததன் மூலம் இந்த சாதனையை செய்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை இஃப்திகார் அகமது படைத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இந்த சாதனையை படைத்த 11ஆவது வீரர் இஃப்திகார் ஆவார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
