ஐபிசி தமிழின் இலக்கு என்ன..! மனம் திறக்கும் கந்தையா பாஸ்கரன்
உலகத் தமிழ் மக்களின் நம்பிக்கையான ஊடகமாக விளங்கும் IBC தமிழ் வானொலி தனது 30ஆவது ஆண்டில் கால்பதித்துள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி லண்டனில் தனது சேவையைத் தொடங்கிய IBC தமிழ் வானொலி, ஆரம்பத்தில் WRN - Vauxhall வழியாக ஒலிபரப்பை ஆரம்பித்தது.
தமிழ் ஈழம், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் குரலாகவும், முதன்மையான தகவல் தளமாகவும் இந்த வானொலி உருவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் London Tamil Media Ltd நிறுவனத்தின் கீழ் செயல்படத் தொடங்கிய IBC, தனது அடுத்தகட்ட பாய்ச்சலாக 2015ஆம் ஆண்டில் தொலைக்காட்சி சேவையையும், 24 மணி நேர இணைய செய்தித் தளத்தையும் விரிவுபடுத்தி உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது வானொலி, தொலைக்காட்சி, இணையம் மற்றும் பல்வேறு நவீன ஊடக வடிவங்கள் ஊடாக உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் உலகளாவிய தளமாக IBC தமிழின் இலக்கு என்ன? நிறுவன தலைவர் கந்தையா பாஸ்கரன் இது குறித்து மனம் திறந்த சுவாரஸ்யமான தகவல்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி,
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam