அநுரவின் மிரட்டலுக்கு நான் பயப்படபோவதில்லை! சுமந்திரன் எச்சரிக்கை
வடக்கு - கிழக்குத் தமிழர் தாயகத்தில் எழுபது வருடங்களுக்கு மேலாக, குறிப்பாக 2009 இற்குப் பின்னர் தீவிரமாக இடம்பெற்று வரும் காணி அபகரிப்பு தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டுக்கள் வலுத்து வருகின்றன.
இந்த பின்னணியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அநுர அரசு தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்படும் என கூறியிருந்தாலும், தற்போது காணி கையகப்படத்தல் தொடர்பில் அவர்கள் வெளியிட்ட வர்த்தமானி தொடர்பில் கோள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த செயற்பாட்டின் தாக்கம் தமிழர் பகுதிகளில் எதிரொலித்துள்ள நிலையில், அரசியல் தலைமைகளின் அழுத்தங்களையும் பெற்று வருகிறது.
அந்தவகையில், மக்களின் காணி சுவீகரிப்பு வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு 28க்கு முன் உறுதி செய்ய வேண்டும் என்றும், தவறினால் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவு போராட்டம் அமையும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் எச்சரித்துள்ளார்.
மேலும், நிலம் இருந்தால்தான் இனம் தொடர்ந்து இருக்கலாம் என சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்...