நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டேனா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜெலன்ஸ்கி
தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நாட்டைவிட்டு போலந்துக்கு தப்பி ஓடியதாக வதந்தி பரவியது. இதை மறுத்துள்ளார் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி.
தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் கூறி உள்ளார். நான் கீவ் நகரில்தான் இருக்கிறேன். இங்கிருந்துதான் எனது பணிகளை மேற்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் இருக்கும் கீவ் நகரில் இரவு பகலாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri