முன்னொருபோதும் இல்லாத அராஜக நிலைக்குள் இலங்கை: என்னால் வாழ்த்து கூற முடியாது என சந்திரிக்கா தெரிவிப்பு (Photo)
நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் தளத்தில் பதிவொன்றை அவர் இட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் அனைத்து குடிமக்களும் அனைத்து வேறுபாடுகளையும் புறக்கணித்து மழையையும் பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் எதிர்காலத்திற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த குடிமக்கள் அனைவருக்கும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், வளமும், ஆரோக்கியமும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் அனைவருக்கும் வளமும், வளமும் மிக்க புத்தாண்டாக அமையட்டும்.
இந்த நெருக்கடியை சமாளித்து அமைதி, சகவாழ்வு மற்றும் ஜனநாயகம் கொண்ட நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam