ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்கிறேன்:ஹர்ச டி சில்வா
குறுகிய காலத்திற்கேனும் சர்வக்கட்சி அல்லது பல கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
அப்படி நடந்தால், புதிய நாடு கட்டியெழுப்பபடும் என்பதுடன் எதிர்கால சந்ததிக்கு நியாயம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் ஹர்ச டி சில்வா இதனை கூறியுள்ளார்.
1/2: Pres @RW_UNP in inaugural address says #SriLanka must be developed in to a modern export oriented competitive social market economy as a hub of the emerging Indo-Pacific economic domain. I agree ?, same view as mine. For that we need massive reforms and get public to agree. pic.twitter.com/nS05hbYD3L
— Harsha de Silva (@HarshadeSilvaMP) August 3, 2022
ஜனாதிபதியின் வேலைத்திட்டம் என்னுடைய நோக்கும் கூட
இலங்கையானது இந்தோ பசுபிக் பொருளாதார பிராந்தியத்தில் ஏற்றுமதி செயற்பாடுகளில் ஆழமான போட்டி மிகுந்த நவீன வர்த்தக பொருளாதார கேந்திர நிலையமாக உருவாக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள வேலைத்திட்டத்திற்கு ஏற்றுக்கொள்கிறேன்.அந்த வேலைத்திட்டமானது என்னுடைய நோக்கும் கூட.
இந்த வேலைத்திடடத்தை செயற்படுத்த பாரிய மறுசீரமைப்பு அவசியம். இந்த வேலைத்திட்டத்திற்கு பொது மக்களை இணங்க வைக்க வேண்டும் எனவும் ஹர்ச டி சில்வா கூறியுள்ளார்.