மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - பொலிஸில் சிக்கிய நபர்
கதிர்காமம் கொயாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மனைவியை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த பின்னர் தலைமறைவாகி இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்படடுள்ளார்.
சந்தேக நபர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் சண்டையிட்ட நிலையில், கோடரியால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு
கைது செய்யப்பட்ட கணவர் ஒருவித விஷமருந்தியிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிலந்த பிரதீப் குமார என்ற நபரே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri