சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
அராலி பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் குறித்த சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அந்த வீதியால் வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
