தமிழக அரசின் உதவி பொருட்கள் நாளை மறுதினம் கொழும்பை வந்தடையும்

M. K. Stalin Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Government Of India Sri Lanka Food Crisis
By Steephen May 20, 2022 12:26 PM GMT
Report

இந்திய மக்கள் வழங்கியுள்ள இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கு மேல் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகையானது நாளை மறுதினம் கொழும்பை வந்தடையும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த உதவி தொகையில் முதல் கட்டமாக 9 ஆயிரம் மெற்றி தொன் அரிசி, 50 மெற்றி தொன் பால் மா மற்றும் 25 மெற்றி தொன்னுக்கும் மேற்பட்ட மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்கள் எனவும் அவற்றை உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதல்வர் .மு.க.ஸ்டாலின் இந்த அத்தியவசிய பொருட்களை ஏற்றிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

தமிழக அரசின் உதவி பொருட்கள் நாளை மறுதினம் கொழும்பை வந்தடையும் | Humanitarian Assistance Tamils India

தமிழக மக்கள் சார்பில் தமிழக அரசாங்கம் 40,000 மெற்றி தொன் அரிசி, 500 மெற்றி தொன் பால் மா மற்றும் மருந்துகளை வழங்கியுள்ளது. தமிழக அரசாங்கத்தின் இந்த உதவி தொகையானது 2 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் மேல் பெறுமதியானவை.

இலங்கைக்கு வந்தடையும் இந்த அத்தியவசிய உணவு பொருட்கள் இலங்கை அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணம் உட்பட நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்.

இந்த பயனாளிகள் இலங்கை சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியவர்கள். இதனை தவிர பல்வேறு அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து பல தனியார் மற்றும் சமூக அமைப்புகள் இலங்கைக்கு உதவிகளை அனுப்பியுள்ளன.

தமிழக அரசின் உதவி பொருட்கள் நாளை மறுதினம் கொழும்பை வந்தடையும் | Humanitarian Assistance Tamils India

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய அரசின் பொருளாதார உதவியாக இலங்கைக்கு வழங்கப்பட்டது. மேலும், மருந்துகள், உலர் உணவுகள் போன்றவையும் இந்திய அரசு மானிய அடிப்படையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US