சர்ச்சையை ஏற்படுத்திய ஓமான் ஆட்கடத்தல் சம்பவம்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
கடந்த நாட்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஓமான் ஆட் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய குழுவொன்று ஓமான் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் குறித்த குழுவினர் நேற்று (10.12.2022) பயணித்துள்ளது.
விசேட விசாரணைகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று விசாரணை அதிகாரிகள் மற்றும் ஒரு பொலிஸ் பரிசோதகர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒரு பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ள சம்பவங்கள் குறித்து விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam