ஜெனிவா பிரேரணையை தோற்கடிக்க இந்தியாவின் முழு ஆதரவு தேவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானங்களை வெற்றிபெறச் செய்வதற்கு இந்தியாவின் ஆதரவை இலங்கை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதிபா மஹாநாமஹேவா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரேரணைக்கு 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளதாகவும், 23 அல்லது 24 நாடுகளின் ஆதரவைப் பெற முடியாத பட்சத்தில் அந்த பிரேரணைகளினால் இலங்கை தோற்கடிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக பிரேரணை
ஆகையினால் வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற வேண்டும் என்றும், இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தால், பல மேற்கத்திய நாடுகள், தென்னாபிரிக்க நாடுகள், கரீபியன் நாடுகள் உட்பட 10 நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
அவ்வாறான ஆதரவை வழங்காமல் இந்தியா மௌனமாக இருந்தால் அந்த முன்மொழிவுகளால் இலங்கை தோற்கடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான இந்தப் பிரேரணைகள் ஒக்டோபர் 6 அல்லது 7ஆம் திகதி முன்வைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்கத்திய நாடுகளின் விருப்பத்திற்கிணங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த பிரேரணைகளை கொண்டு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈழத்தை வென்றெடுக்க போராட்டம்
இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெறுவதாகத் தெரிகின்றது எனவும் இலங்கையை ஒரு நாடாக தனிமைப்படுத்துவது தவறான செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பு, ஒரு நாட்டின் மனித உரிமைகளை அபிவிருத்தி செய்வதும், அதற்காக முதன்மையாக செயற்படுவதுமே தவிர, இவ்வாறான பிரேரணைகளை கொண்டுவந்து அந்த நாடுகளுக்கு எதிராக செயற்படுவது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
புலம்பெயர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகவும் அந்த அமைப்புகளை எவ்வளவோ விடுவித்தாலும் ஈழத்தை வென்றெடுக்க போராடுவதாகவே தெரிகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 28 நிமிடங்கள் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
