மாற்று வலுவுடையோருக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை

Human Rights Commission Of Sri Lanka Human Rights Council Jaffna Mullaitivu
By Thileepan May 30, 2022 09:36 PM GMT
Report

மாற்று வலுவுடையோருக்கான அணுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

மாற்று வலுவுடையோருக்கான சட்டங்கள்

மாற்று வலுவுடையோருக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை | Human Rights Commission Of Sri Lanka

மாற்றுவலுவுடையோர் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்குரிய அணுகும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு சட்டங்களும், ஒழுங்குவிதிகளும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் வலுவில் உள்ள நிலையில் பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் மாற்றுவலுவுடையோருக்கான அணுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுகவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக 1978ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் யாப்பின் பிரகாரம் 3 ஆம் அத்தியாயத்தின் உறுப்புரை 12இன் உப பிரிவு 2இன் பிரகாரமும் 1996 ஆம் ஆண்டு 28ஆம் இலக்க மாற்றுவலுவுடையோரினுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் பிரகாரமும் இலங்கையில் மாற்றுவலுவுடையோரது உரிமைகளை பாதுகாப்பது சகலரதும் பொறுப்பாகும்.

அத்துடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிவிசேட வத்தமானி இல 1465/15 (ஒக்டோபர் 17 2018) பிரகாரம் சகல அரச திணைக்களங்களிலும் மாற்றுவலுவுடையோருக்கான அணுகுதல் வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் பல ஒழுங்கு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கிலக்கம் SCFR NO 221/2009 இன் தீர்ப்பில் மாற்றுவலுவுடையோருக்கு அணுகுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் மிக தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முறைப்பாடு

மாற்று வலுவுடையோருக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை | Human Rights Commission Of Sri Lanka

அதனடிப்படையில் மாற்றுவலுவுடையோருக்கான அணுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்காமை தொடர்பில் 1996/21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின சொந்த பிரேரணை அடிப்டையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ்ப்பாண மற்றும் வவுனியா அலுவலகங்களில் அவதானிப்புகளின் கீழ் இரண்டு முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றதன் அடிப்படையில் இலங்கை வங்கியின் உரும்பிராய் கிளையிலும் முல்லைத்தீவு கிளையிலும் மாற்றுவலுவுடையோர் உட்பிரவேசிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் பல நிறுவனங்களில் மாற்றுவலுவுடையோர் உட்பிரவேசிப்பதற்கான வசதிகள் காணப்படவில்லை என்பதுடன் அந்நிறுவனத் தலைவர்கள் தாமாக முன்வந்து மாற்றுவலுவுடையோர் உட்பிரவேசிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ்ப்பாணம், வவுனியா அலுவலகம் கேட்டுக்கொள்கின்றது” என்று அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US