2024ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கையில் இலங்கை குறித்து வெளியான தகவல்
ஐக்கிய நாடுகள் சபை தனது 2024ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கையில் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் ஆளுமையில் சுறுசுறுப்பை வெளிப்படுத்தும் மூன்று நாடுகளில் ஒன்றாக இலங்கையை பட்டியலிட்டுள்ளது.
புதிய தகவல்கள், எதிர்பாராத நிகழ்வுகள் அல்லது முன்னுரிமைகளை மாற்றுவதில் வேகம் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸூடன் மூன்றாவது நாடாக இலங்கையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேசிய மாற்றம்
2022 நெருக்கடியானது திசையில் ஒரு தேசிய மாற்றத்திற்கான வாய்ப்பை வழங்கியது. அத்துடன் இலங்கையின் சமூக வர்க்கம், மதம் அல்லது அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், வெவ்வேறு பிரிவினர் ஒன்றிணைந்து மாற்றத்திற்காக பரப்புரை செய்வதற்கு ஏற்ற சூழலை அது உருவாக்கியது.
அதேநேரம் பல்வேறு பிரிவுகளுடன் இணைந்து, ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்த உதவியதாக 2024ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய மனித மேம்பாட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
