புற்றுநோயை எப்படி தடுப்பது? சுவிஸிலிருந்து முகப்புத்தக நேரலை ஊடாக விழிப்புணர்வு நடவடிக்கை
புற்றுநோயை எப்படி தடுப்பது? எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையானது சுவிஸிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையானது நாளைய தினம் சுவிஸ் நேரப்படி பிற்பகல் 07.30 மணிக்கு முகப்புத்தக நேரலை ஊடாக நடத்தப்படவுள்ளது.
www.facebook.com/tavs.ch என்ற முகப்புத்தக பக்கத்தின் ஊடாக நேரலையில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதார நிபுணர்கள் மற்றும் தனிபட்ட முறையில் அனுபவமுள்ளவர்கள் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை பரிமாறிக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.