ஜெனிவா சமரை எவ்வாறு எதிர்கொள்வது? மஹாசங்கத்தினருடன் பிரதமர் ஆலோசனை

The Prime Minister consulted with the General Assembly
By Independent Writer Feb 12, 2021 10:57 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை மற்றும் அது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதிப்புமிக்க மஹாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

கொரோனாத் தொற்று நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய உலக நாடுகளுக்கிடையே இலங்கை முன்னணியில் காணப்படுகின்ற நிலையில், எமது நாட்டை இழிவுபடுத்தும் நோக்கில் மிகவும் தவறான கருத்துக்களை உள்ளடக்கி மிக மோசடியான முறையில் இந்த மனித உரிமைகள் திணைக்கள அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாட்டின் வெற்றிக்கும், இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான 16 விடயங்களை உள்ளடக்கி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வணக்கத்துக்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், "இதுபோன்ற தீர்மானமிக்கதொரு தருணத்தில் மரியாதைக்குரிய மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்தை பெறுவதற்கு தீர்மானித்தமை குறித்து நான் முதலில் பிரதமர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சூழ்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு எதிரான தீர்மானமொன்றை சமர்ப்பிப்பது பொருத்தமற்றது. அதற்குப் பதிலாக எமது தரப்பு நீதியை எடுத்துரைக்கும் பிரதிவாத அறிக்கையொன்றை மாத்திரம் முன்வைக்க வேண்டும்" - என்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நோக்கம் நாட்டைப் பிரிப்பதே எனச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், மனிதாபிமான முறையின் கீழ் பயங்கரவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது போர்க்குற்றம் என்று கூறுவது பாரிய குற்றமாகும் எனவும் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்துக்கு அமைவான நல்லிணக்கம் மிகவும் ஆபத்தானது என்றும், அத்தகைய உடன்பாடு இல்லாமல் நாடாளுமன்றத்தில் தேசபற்று சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமானது என்றும் அவர்கள் கூறினர்.

இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள பௌத்த நாடுகளுக்கு நமது தேரர்களின் ஊடாக சில தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அதனூடாக நேர்மறையான பதிலை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வணக்கத்துக்குரிய பெங்கமுவே நாலக தேரர், மனிதாபிமான செயற்பாட்டின் மூலம் பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்கள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளை கவனத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒப்புக்கொண்ட 30 (1) தீர்மானம் நாட்டில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தீர்மானத்தின் விளைவாக பொருளாதாரத் தடைகள், பயணத் தடை மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமை போன்ற பல விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை உருவாக்கக்கூடும் என்று தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்தத் தீர்மானத்துக்கு எதிராக எமக்கு சார்பாக விளங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவது சாதாரண நடைமுறை என்ற போதிலும் இந்தத் தீர்மானத்துக்கமைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஒரு தீர்மானங்களை மேற்கொள்வது நியாயமில்லை எனவும், ஆனால், இந்தத் தீர்மானத்துடன் நீதி, சட்டம் மற்றும் நேர்மை ஆகின நெருங்கக்கூடவில்லை என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதன்போது வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கருத்துத் தெரிவிக்கையில், "இந்த ஆபத்துக்கு குறிப்பிடத்தக்க இரு காரணிகள் பங்களிப்புச் செலுத்துகின்றன.

இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்காமை இறுதியில் அமெரிக்காவின் தேவைகள் நிறைவேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பாக நமது நாடு சார்பாக கால அவகாசத்தை கோர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கால அவகாசத்துக்கு உடன்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் விமல் வீரவன்ச, எவ்வளவு விளக்கமளித்தாலும் மாறாத நிலைப்பாட்டிலுள்ள நாடுகளினாலேயே இலங்கைக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

சில நாடுகளின் கொள்கைகள் மாறாது என்றும், எங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த வணக்கத்துக்குரிய நெதகமுவே விஜய மைத்திரி தேரர் கூறுகையில், "இலங்கைக்கு வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதுடன், தமிழ் புலம்பெயர்ந்தோரின் கருத்துக்கு செயற்படாத தூதரக சேவையை பலப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள முடியும்" என்றார்.

மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்துக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எவ்வாறான சவால்களுக்கு நாடு முகங்கொடுத்தாலும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் மஹாசங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கேற்பவே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.  

7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US