ரஞ்சன் சிறையில் எப்படி இருக்கின்றார் - வெளியான புகைப்படம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் இருக்கும் புகைப்படம் ஒன்று முதல் முறையாக வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண, ரஞ்சன் ராமநாயக்கவை சிறையில் சென்று சந்தித்து நலன் விசாரித்த போது எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படமே இவ்வாறு வெளியாகியுள்ளது.
இது குறித்து ஹர்சன ராஜகருண சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அன்புக்குரிய அரசியல் சகா, ரஞ்சன் ராமநாயக்கவின் நலன் அறிய அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ரஞ்சன் சிறையில் வாழ்ந்து வரும் வாழ்க்கை குறித்து ஒன்றை புரிந்துக்கொள்ள முடிந்தது.
ரஞ்சனின் உயிருக்கு ஆபத்து இருக்கின்றது என்பது எனக்கு மாத்திரமல்ல, சாதாரணமாக சிந்திக்கும் அனைவருக்கும் புரியும் விடயம்.
எனது அரசியல் சகாவே, இலங்கை நாடாளுமன்றத்தில் பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உங்களுக்காக குரல் கொடுக்க நான் எந்த சந்தர்ப்பத்திலும் தயங்க போவதில்லை என ஹர்சன ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது? Cineulagam
