இரகசியமாக வைத்திருந்த அறிக்கை வெளியே கசிந்தது எப்படி? (Video)
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமெரிக்க நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையின் பிரதி அவருக்கு கிடைத்த விதத்தை அரசாங்கத் தரப்பினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தப்பட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் எதிர்க்கட்சியின் அந்த சிரேஷ்ட உறுப்பினரின் கைகளுக்கு இந்த உடன்படிக்கை கிடைத்த விதத்தையும் அரசாங்கம் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் சர்வதேச தரப்புடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளவர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,