கொழும்பில் பொம்மை கைத்துப்பாக்கி காண்பித்து பாரிய மோசடி! சுற்றிவளைத்த பொலிஸார்
கொழும்பில் உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் வீட்டை வலுக்கட்டாயமாக அபகரிக்க முற்பட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் உயிரிழந்த பாதாள உலகக்குழு உறுப்பினரான வானத்தே ஒல்கொட்டின் சிறிய தாயும் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் பொம்மை கைத்துப்பாக்கியை காண்பித்து உயிரிழந்த வைத்தியர் தனது வீட்டை தங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக கூறி வீட்டிலிருந்தவர்களை வெளியேற்ற முயன்றுள்ளனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணி மோசடி
குறித்த வைத்தியரின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்த உடனே குறித்த குழுவினர் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் மகன் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த வைத்தியரால் வீடும்,காணியும் தமக்கு அனுமதிப்பத்திரத்தின் ஊடாக மாற்றப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்ற நபரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
