ஹோட்டலில் விருது வழங்கும் விழாவில் தீ விபத்து - இருவர் மருத்துவமனையில்
தலவதுகொட ஸ்ரீ ஜயவர்தன மருத்துவமனை வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகையை சுவாசித்ததால் இருவரும் ஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் ஹோட்டலின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
விருது வழங்கும் விழா
அந்த நேரத்தில் அங்கு ஒரு நிறுவனத்தின் விருது வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தீயை அணைக்க கோட்டை நகர சபை தீயணைப்பு திணைக்களத்தின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
மின் கோளாறே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 13 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri