ஒத்திவைக்கப்படும் சத்திரசிகிச்சைகள்: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட தகவல்
அவசரகால சத்திரசிகிச்சைகளுக்கான வைத்திய உபகரணங்களைப் பாதுகாப்பதற்காக தமது வழமையான சத்திரசிகிச்சைகளை ஒத்திவைக்கும் நிலைமைக்கு வந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர், ஹரித அலுத்கே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மருந்து, உபகரண தட்டுப்பாடு
எஞ்சியுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளைக் கொண்டு, இருதய சத்திரசிகிச்சை போன்ற உயிர்காக்கும் சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மயக்க மருந்து, தொடர்புடைய மருத்துவ உபகரணங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் சிக்கலான சூழ்நிலைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகியவற்றின் பற்றாக்குறை, வழக்கமான மருத்துவ நடவடிக்கைகளில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
திருப்பி அனுப்பப்படும் நோயாளிகள்
ஆனால், தற்போது மருந்து, உபகரண தட்டுப்பாடு நிலவி வருவதால், அறுவை சிகிச்சை செய்யாமல் நோயாளிகளை மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
புற்றுநோய் தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்ய வரவு செலவு திட்டத்தில் 40% ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த இறக்குமதிகள் முன்னுரிமையைக் கண்டறிந்து
செய்யப்பட்டதா என்பது தங்களுக்குத் தெரியாது என்று ஹரித அலுத்கே
குறிப்பிட்டுள்ளார்.