வீட்டிற்குள் புகுந்து நகை அபகரிப்பு: வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை தாக்கிவிட்டு நகையை திருடிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(14) திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த நபர் வீட்டிலிருந்த
பெண்ணிடம் விலாசம் ஒன்றை காண்பித்து விசாரித்துள்ளார்.
சம்பவம்

பின்னர் வீட்டிலிருந்து வெளியேறுவது போல் சென்றுவிட்டு மீண்டும் ஓடி வந்து பெண் அணிந்திருந்த 2 பவுண் நகையை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளார்.
இதன்போது குறித்த பெண் சங்கிலியை அறுக்கவிடாது தடுத்த நிலையில் பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
பொலிஸ் விசாரணை

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri