கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழா
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய 2026 மகோற்சவப் பருவிழா இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
முருகப்பெருமானுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று காலை மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று முருகப் விநாயகப் பெருமான், சிவன் உமாதேவியார் சமேதராயும் மற்றும் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராயும் வசந்த மண்டபத்திலிருந்து கொடித் தம்பம் எழுந்தருளி கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றம்
மாவை கந்தனின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் (11/08 ) தேர்த் திருவிழாவும் (12/08) ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித தீர்த்தத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாவை கந்தனின் கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்.









சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan