ஹிஷாலினி விவகாரம்! - மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mano Ganesan Rishad Bathiudeen Mahindananda Aluthgamage Hishalini
By Murali Jul 24, 2021 09:11 PM GMT
Report

ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது. எவருக்காகவும் இதை கைவிட மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஹிஷாலினி பற்றி கூப்பாடு போடும் டிலான் பெரேரா, மகிந்தானந்த அலுத்கமகே, முஹமட் முசாம்பில் இதை அறிய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய எம்பீக்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய் பேசும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க கட்சி அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?

சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் (1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு (2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3) பாராளுமன்றத்தில் உரை மற்றும் நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி (4) மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5) சிங்கள மொழி ஊடக மாநாடுகள் (6) சிங்கள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், "சிறுமி ஹிஷாலினி" விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது என்பதை கூப்பாடு போடும் அரசாங்க அரசியல்வாதிகள் உணரவேண்டும்.

இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

இன்று தோட்டத்தொழிலாளர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது வருமானம் எமது நல்லாட்சியின் 2019ம் ஆண்டை விட, இன்று வெகுவாக குறைந்து விட்டது.

இதற்கு காரணம், ஒருபுறம், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டு இந்த அரசாங்கம், வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, சும்மா இருக்கிறது.

மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது. சிறுமி ஹிஷாலினி உட்பட, பெருந்தோதோட்ட பிள்ளைகள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வந்து ஆபத்தில் விழுவதற்கு பெருந்தோட்டத்துறையில் இன்று நிலவும் அதிமோச வறுமைதான் காரணம்.

இந்த அதிமோச வறுமைக்கு காரணம் என்ன? இந்த அரசாங்கத்தின் தோட்டத்தொழிலாளர் தொடர்பான அக்கறையின்மை, அரசில் இருக்கின்ற இதொகாவின் மௌனம் ஆகியவையே பிரதான காரணங்கள் என்பதை, இன்று சிறுமி ஹிஷாலினி பற்றி பொய்யாக கூப்பாடு போடும் எம்பி டிலான் பெரேரா, அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, எம்பி முஹமட் முசாம்பில் போன்றவர்கள் உணர வேண்டும்.

எமது கடமையை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

“இந்த பிரச்சினை தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. இது ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை” என கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் இலங்கை பாராளுமன்றத்தில், மிக நிதானமாகவும், மிக பொறுப்புடனும் தெளிவாக பலமுறை எடுத்து கூறி விட்டேன்.

ஹிஷாலினி வீட்டுக்கு சென்று மௌன அஞ்சலி செலுத்தியதை தவிர, அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இதொகா, இந்த பிரச்சினை பற்றி கூறும்படியாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை.

எதுவாயினும், இப்போது விசாரணை நடக்கின்றது. அதற்கு அனைவரும் கண்காணிப்புடன் கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். இந்நிலையில், எம்மை பற்றி கூசாமல் பொய் பேசி குறை கூறும், ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?

நாம் எமது ஆட்சியில் துண்டு விழும் மேலதிக 50/= ரூபாவை தர தவறிவிட்டோம் என குற்றம் சாட்டிய இவர்கள் தோட்டத்தொழிலாளருக்கு இவர்களின் ஆட்சியில் இன்று என்ன செய்துள்ளார்கள்?

ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறோம், என்று கூறிவிட்டு, வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, இந்த அரசாங்கம் சும்மா இருக்கிறது.

மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது. ஆகவே பத்து நாள் வேலையும், குறைந்த வருமானமும் தோட்ட தொழிலாளரை வாட்டுகிறது. வறுமை பெருந்தோட்ட துறையில் தாண்டவமாடுகிறது.

இதுவே இன்று சிறுமி ஹிஷாலினி உட்பட கணிசமான பெருந்தோட்ட துறை பிள்ளைகள், பெண்கள், ஆண்கள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வர பிரதான காரணம். வறுமை எல்லோருக்கும் பொதுவானதுதான்.

அதனால்தான், இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் தொழில் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று சொல்லொணா துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். இப்படிதான், மூதூரை சேர்ந்த ஏழை முஸ்லிம் சிறுமி றிசானா நபீக், சவுதி அராபியா சென்று அங்கே கொல்லபட்டார்.

ஆனால் பெருந்தோட்டதுறையில், இன்று ஏற்பட்டுள்ள நிலைமை, 70 களில் அன்றைய சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சிக்கால நிலைமையை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பதை இந்த அறிவு கெட்ட அமைச்சர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.

எதிரணியில் இருக்கும் எம்மை பொய்யாக குறை கூறுவதை விட்டு, இவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் ஆவன செய்ய வேண்டும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US