ரணிலின் திட்டங்களை அம்பலப்படுத்தும் ஹிருணிக்கா
அண்மையில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விகரமசிங்க, காயமடைந்த இராணுவத்தினரைப் பார்வையிடுவதற்காக இராணுவ மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில் அவ்வாறானதொரு செயலை அவர் இதற்கு முன்னர் ஒரு போதும் செய்ததில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ரணிலின் நாடகம்

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்க பதில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் சில அரசியல் குழுக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்த குளமாக மாறும் இலங்கை

அத்துடன் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் மூலம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானால் நாட்டை இரத்தக் குளமாக மாற்றக்கூடிய காரணியாக அது மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றுறைய தினம் (16.07.2022) லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இராணுவ ஆய்வாளர் பிரித்தானியாவின் வேல்ஸ் இல் இருந்து அரூஸ் அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விகரமசிங்க, காயமடைந்த இராணுவத்தினரைப் பார்வையிடுவதற்காக இராணுவ மருத்துவமனைக்குச் சென்றது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam