ஈரானில் ஹிஜாப் போராட்டம்: இதுவரை 16 பெண்கள் உட்பட 55 செய்தியாளர்கள் கைது
ஈரானில், நான்கு மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஹிஜாப் போராட்டத்தின்போது, இதுவரை 16 பெண்கள் உட்பட 55 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 27 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர். மேலும், 28 பேர் பிணையில் அனுமதிக்கப்பட்டு விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர்.
செய்தியாளர் அமைப்பு அழைப்பு
இந்தநிலையில், கடந்த வார இறுதியில் மூன்று பெண் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தியாளர்களை உடனடியாக விடுவிக்கவும்,
அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளை கைவிடவும் ஈரானிய அதிகாரிகளுக்கு
எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
