அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக வரி - சிகரெட்டுக்கு வரிச்சலுகை
அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதித்துள்ள போதும், சிகரெட் உற்பத்திகளுக்கு தற்போதைய அரசாங்கம் குறிப்பிடத்தக்க வரிச்சலுகை வழங்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு, பொதுமக்கள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டில் சிகரெட்டுகளுக்கு மட்டும் 17.3 பில்லியன் ரூபாய் விசேட வரிச் சலுகையை அரசாங்கம் வழங்கியுள்ளது என வெரிடே ரிசர்ச் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.
மறைமுக வரிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும்
வெரிடே ரிசர்ச் நிறுவனத்தின் தரவுப் பகுப்பாய்வின்படி, அதிகம் விற்பனையாகும் ஒரு சிகரெட் உற்பத்திக்கு அதன் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75வீத வரி விதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த போதிலும், இலங்கை அரசாங்கம் அந்தத் தரநிலைகளைப் பின்பற்றத் தவறிவிட்டது.

மாறாக, 2018ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடுகையில் தற்போது இலங்கையில் சிகரெட்டுகள் மீதான வரி விகிதம் 66.8வீதமாகக் குறைந்துள்ளதாக கலாநிதி நிஷான் டி மெல் குறிப்பிடுகிறார்.
குறிப்பாக நாட்டின் பெறுமதிசேர் வரி வரி (VAT), சமூகப் பாதுகாப்பு வரி மற்றும் பிற மறைமுக வரிகள் பெருமளவில் அதிகரிக்கப்பட்ட போதிலும், சிகரெட்டுகள் மீதான வரிச்சுமை 7.6வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலைத் தொழிலுக்கு வரிச் சலுகை வழங்கியுள்ளதன் காரணமாக அரசாங்கம் பெரும் வரி வருமானத்தை இழந்துள்ளது.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan