இதுவே சரியான தருணம்..! ஈரானின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கு இதுவே சரியான தருணம்" என்று சவூதி அரேபியாவிடம் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
அவர் X சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் சவுதி அரேபியாவை “மிகவும் மதிக்கிறது” என்றும், அதை “சகோதர நாடாக” கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே சரியான தருணம்
மேலும், அரபியர்களையோ ஈரானியர்களையோ மதிக்காத எதிரி ஆக்கிரமிப்பாளர்களை" குறிவைத்தே ஈரானின் நடவடிக்கைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Iran respects the Kingdom of Saudi Arabia and considers it a brotherly nation.
— Seyed Abbas Araghchi (@araghchi) March 30, 2026
Our operations are aimed at enemy aggressors who have no respect for Arabs or Iranians, nor can provide any security. Just look at what we did to their aerial command.
High time to eject U.S. forces. pic.twitter.com/yYNBpebN8i
அவரது பதிவுடன், அமெரிக்க வான்படை அடையாளங்களுடன் காணப்படும் சேதமடைந்த விமானத்தின் படமும் இணைக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வானியல் கட்டுப்பாட்டு அமைப்புக்கு நாம் என்ன செய்தோம் என்பதை பாருங்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை, அமெரிக்க மத்திய கட்டளை மையம் இந்த சம்பவம் குறித்து எந்த பொதுக் கருத்தையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.