தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தெற்கு அதிவேக வீதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக பொலிஸார் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக வெலிப்பன்ன நுழைவாயிலுக்கும் பின்னதுவ நுழைவாயிலுக்கும் இடையில் பயணிக்கும் சாரதிகளை கவனமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளை கேட்டு கொண்டுள்ளனர்.
பொலிஸார் கோரிக்கை
இந்நிலையில் பனி மூட்டம் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் தெற்கு அதிவேகப் பாதையில் மிதமான வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தெற்கு அதிவேகப் பாதையில் கடும் பனிமூட்டம் காரணமாக பாதை தெளிவாக புலப்படுவதில்லை என்று வாகன சாரதிகள் பலரும் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் பொலிஸாரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




