கொழும்பில் ஏற்பட்டுள்ள சுகாதார அச்சுறுத்தல் - பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு
மேல் மாகாணத்தில் 10 வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நுளம்பு பெருகும் இடங்களின் பிரிட்டோ சுட்டெண் தற்போது 20யை தாண்டியுள்ளது.
இந்நிலைமை டெங்கு தொற்றுநோய் மிக தீவிரமாக பரவுவதற்கு வழிவகுக்கும் முக்கிய காரணியாக குறிப்பிடப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் ஆபத்து

ஒரு நுளம்பின் முட்டை ஒரு வருடத்திற்கும் மேலாக வறண்ட சூழலில் இருக்கும், மேலும் முட்டை பொரிக்கும் போது, நுளம்பு 8 முதல் 10 நாட்களுக்குள் சுற்றுச்சூழலுக்குத் திரும்பும் என நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.
இதனால், அதிக அளவில் சுற்றுச்சூழலுக்கு விடப்படும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் போத்தல்கள் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு எச்சரிக்கை
தற்போது பணி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள கொங்கிரீட் கட்டங்கள் நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam