சுகாதார அமைச்சு பதவி பறிபோகின்றதா..! கெஹலிய விளக்கம்
சுகாதார அமைச்சு பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
'சுகாதார அமைச்சு பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி உங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனச் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளனவே?' என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கெஹலிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சவால்களை கண்டு ஓட முடியாது
மேலும் கூறுகையில்,"இல்லை, எனது குடும்ப உறுப்பினர்கள் தான் இந்த கோரிக்கையை விடுத்தனர். ஆனால், விமர்சனங்களை எதிர்கொண்டவாறு சவால்களை சந்திப்பேன் எனக் கூறியுள்ளேன்.
பல பொறுப்புக்களை வகித்தவன் நான். எனவே, சவால்களை கண்டு ஓட முடியாது. அதனை எதிர்கொள்ள வேண்டும். குடும்பத்தாரை என்னால் சமாளிக்க முடியும். வெளி தரப்பில் இருந்து அவ்வாறானதொரு கோரிக்கை விடுக்கப்படவில்லை." என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |