கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் மூளை பக்கவாதம்
யு.எஸ். மருந்து தயாரிப்பாளரான ஃபைசர் இன்க் மற்றும் ஜெர்மன் பங்குதாரர் பயோஎன்டெக் ஆகியவற்றின் அண்மைய புதுப்பிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி, வயதானவர்களுக்கு மூளை பக்கவாதத்தை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பில் அமெரிக்க சுகாதார அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு; தடுப்பு மையங்கள் மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது.
பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம், இந்த தடுப்பூசி தரவுத்தளத்தில் சாத்தியமான பாதுகாப்பு சிக்கலைக் கண்டறிந்துள்ளது.
இதில் 65 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, ஃபைசர் ஃபயோஎன்டெக் பைவலன்ட் தடுப்பூசியைப் பெற்ற 21 நாட்களுக்கு பின்னர், இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மூளை இஸ்கிமியா என்றும் அழைக்கப்படும் இஸ்கிமிக் பக்கவாதம், மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளால் ஏற்படுகிறது இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள சுகாதார பாதுகாப்பு திட்டங்களின் முக்கிய நிறுவனங்கள், உடனடியாக இந்த தகவல்களை உறுதி செய்யவில்லை.
முற்றாக இந்த சுகாதாரப் பாதுகாப்பு சிக்கல் குறித்து தொடர்ந்தும் ஆய்வுகள் தேவை என்று தெரிவித்துள்ளன.
இதேவேளை மொடர்னா பைவலன்ட் தடுப்பூசியின் மூலம் இந்தப் பாதுகாப்பு பிரச்சினை அடையாளம் காணப்படவில்லை என்று ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri