ஹட்டன்- டிக்கோயா நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்
ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன்- டிக்கோயா நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு டிக்கோயா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன, திறந்த வாக்கெடுப்பு மூலம் நகர சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உபதலைவர் தெரிவு
அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் பெருமாள் சுரேந்திரன் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அழகமுத்து நந்தகுமார் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர். இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 08 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதில் 08 வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டார். எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அழகமுத்து நந்தகுமார் 07 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பெருமாள் சுரேந்திரன் பெயர் முன்மொழியப்பட்டது. அதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக செல்லையா யோகேஸ்வரம் பெயர் முன்மொழியப்பட்டது.

இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பெருமாள் சுரேந்திரன் 08 வாக்குகளை பெற்று சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக செல்லையா யோகேஸ்வரம் 07 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri