பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரித்தானியாவுக்கு திடீர் பயணம்….
பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பிரித்தானியா பயணமானார்.
22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாடு (22nd Annual Commonwealth Education Forum) மற்றும் 2026 பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காகவே பிரித்தானியா சென்றுள்ளார்.
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள சந்திப்புக்கள்
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது கல்வி அபிவிருத்தி ஆய்வுகள் ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல உயர்மட்டக் கல்விசார் மற்றும் இராஜதந்திரச் சந்திப்புகளில் கலந்துகொள்வார்.
இதன்போது பிரதமர் பிரித்தானிய கல்வித் திணைக்களத்தில் அந்நாட்டு கல்விச் செயலாளர் பிரிஜட் பிலிப்சனை (Bridget Phillipson) சந்தித்து கல்வி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்தோடு இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் இவெட் கூப்பருடன் (Yvette Cooper) விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
22ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாட்டிற்கு இணையாக பொதுநலவாய பொதுச் செயலாளர் ஷெர்லி அயோர்கர் போச்வேயையும் (Shirley Ayorkor Botchwey) அவர் சந்திக்கவுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam