சஜித் பிரேமதாசவினால் தண்ணீரூற்று முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்(Sajith Premadasa )முல்லைத்தீவு(Mullaitivu) தண்ணீரூற்று முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் கணினிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற மற்றும் ஸ்மார்ட் கணணி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்ப முன்னெடுக்கப்படும் “பிரபஞ்சம்” வேலைத்திட்டத்தின் கீழ் இன்றைய தினம்(03.04.2024) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் பத்து இலட்சத்திற்கும் அதிகமான நிதியில் குறித்த ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஐந்து கணணிகள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.
கற்றல் திறனை அதிகரிக்கும் செயற்திட்டம்
தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை மாணவர்களிடம் கையளித்துள்ளார்.
இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரபிரகாஸ் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மு.லக்சயன் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் கட்சி பிரமுகர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்ட நிலையில் பாடசாலையில் விஷேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை இன்றையதினம், முத்துஐயன்கட்டு மற்றும், விசுவமடு பகுதிகளிலும் மேலும் இரண்டு பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகள் எதிர்க்கட்சித் தலைவரால் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
