ஓமானில் மரணித்த இலங்கை பெண் விவகாரத்தில் மூவர் கைது

Sri Lankan Peoples Ministry Of Public Security Death Oman Women
By Sajithra Jan 06, 2025 11:05 PM GMT
Report

ஓமானில் மரணித்துள்ள அம்பாந்தோட்டை யுவதி மற்றும் அவரது சகோதரியை ஏமாற்றி சுற்றுலா விசாவில் தொழிலுக்கு அனுப்பியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த யுவதியின் மரணம் கொலையா என்பது தொடர்பில் ஓமானின் இலங்கை தூதரக காரியாலயம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில், ஓமான் நாட்டுக்கு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அழைத்துச் சென்று, அந்த நாட்டில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகி மரணித்த அம்பாந்தோட்டை சுசீ கிராமத்தைச்சேர்ந்த 22 வயதுடைய யுவதி மற்றும் அவரது மூத்த சகோதரியை ஏமாற்றி நயவஞ்சகமான முறையில் மனித கடத்தலில் ஈடுபட்டுவந்த அம்பாந்தோட்டை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள எலிக்காய்ச்சலால் இருவர் பலி

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள எலிக்காய்ச்சலால் இருவர் பலி

விசேட நடவடிக்கை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளின் விசேட நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஓமானில் மரணித்த இலங்கை பெண் விவகாரத்தில் மூவர் கைது | Hambantota Women Deied In Oman

குறித்த சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி மற்றும் ஒரு சந்தேக நபர் அம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் வைத்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய சந்தேக நபர் அம்பாந்தோட்டை நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதிகள் இருவரையும் டுபாயில் பராமரிப்பு சேவை தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஓமானில் வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்காக அனுப்புவதற்கு இந்த சந்தேக நபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் சென்றுள்ளதால், தொழில் இல்லாமல் ஓமானில் பல்வேறு இடங்களில் இந்த யுவதிகள் இருவரும் தொழிலுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - தந்தை உட்பட இருவர் பலி - இலக்கு வைக்கப்பட்ட நபர்

ஒரே குடும்பத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - தந்தை உட்பட இருவர் பலி - இலக்கு வைக்கப்பட்ட நபர்

சட்ட நடவடிக்கை 

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிய நிலையில் 22 வயதுடைய துவான் ராசிக் ரமீசா என்ற யுவதி அங்கு மரணித்துள்ளதாக அவரின் மூத்த சகோதரி தனது தாயிக்கு அறிவித்துள்ளார். அனுமதி பத்திரம் எதுவும் இல்லாமல் சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக அனுப்பிய இந்த நடவடிக்கை மனித கடத்தல் என்பதுடன் அது சட்டவிரோத நடவடிக்கையாகும்.

ஓமானில் மரணித்த இலங்கை பெண் விவகாரத்தில் மூவர் கைது | Hambantota Women Deied In Oman

இவ்வாறான மனித கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காமல் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதாக பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மரணம் கொலையா என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் இதுதொடர்பில் ஓமானின் இலங்கை தூதரக காரியாலயம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. விசாரணைகளின் முடிவின் பின்னரே சடலத்தை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரும் அம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்திய போது அவர்கள் மூவரையும் ஜனவரி 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அம்பாந்தோட்டையில் அரிசி கொள்வனவிற்காக அலைமோதிய மக்கள்

அம்பாந்தோட்டையில் அரிசி கொள்வனவிற்காக அலைமோதிய மக்கள்

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US