ஐரோப்பாவில் ஒமிக்ரோன் தொடர்பில் உலக சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
ஐரோப்பாவில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவர் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து கொரோனாத் தொற்று மாறுபாடு உலகளாவிய பொருளாதார மீட்சியைத் தடுக்கும் என்று உலக வங்கியும் எச்சரித்துள்ளது.
தற்போதைய பரவல் விகிதத்தில் ஒமிக்ரோன் ஐரோப்பியாவில் உள்ள அனைத்து மக்களையும் பாதிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.
AFP செய்திச்சேவையின் கணக்கின்படி, ஐரோப்பாவே, தற்போது உலகளவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் தொற்றுக்களை பதிவுசெய்துள்ளது,
அங்கு, கடந்த ஏழு நாட்களில் கிட்டத்தட்ட 80 லட்சம் தொற்று நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ்( Hans Kluge) நேற்று வெளியிட்டுள்ள கருத்து ஒன்றில் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் இந்தப் பகுதியில் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை ஒமிக்ரோன் பரவல் காரணமாக 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
Omicron தொற்று காரணமாக, தொழிலாளர் வெற்றிடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் அதிகரிக்கும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது
