அரசாங்கம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகின்றது
அரசாங்கம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது கிராமங்களில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த பிரஜா சக்தி என்ற திட்டமானது உண்மையில் ஜனநாயக விரோதமான ஒரு திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களே பெரும்பாலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முஸ்லிம்களும் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரத்தில் அள்ளுண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு வங்குரோத்து அடைந்து விட்டது எனவும் இதற்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு எனவும் பிரசாரத்தை தீவிரமாக முடக்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சாரத்தை நம்பி பலர் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தனர் என அவர் சுட்டி காட்டியுள்ளார். இப்பொழுது நாட்டு மக்கள் இந்த பிரசாரத்தை புரிந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பிரஜா சக்தி என்ற ஓர் நிறுவனம் உருவாக்கப்பட்டு கிராமங்களில் நுழைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் ஆபத்தான ஒரு விடயம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எந்தவிதமான ஜனநாயக கட்டமைப்பும் இன்றி கிராமங்களில் வேலை செய்வதற்கு இந்த பிரஜா சக்தி என்ற அமைப்பு பயன்படுத்தப்படுவதாகவும் இது தங்களது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு உத்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியை முறியடிப்பதற்காக ஏனைய கட்சிகளும் தற்பொழுது இவ்வாறான செயல்முறைகளை ஆரம்பித்துள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri