வளமான நாடு அழகான வாழ்க்கை அரசாங்கத்திற்கு மட்டுமே
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பிரசார தொனிப் பொருள் ஆளும் கட்சிக்கு மட்டுமே பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்ந்தன இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மக்களுக்கு வளமான நாடு அழகான வாழ்க்கை கிடைக்கப்பெறவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் அமைச்சர்களது நிலையை பார்த்தால் இதனை புரிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லால் காந்த செல்வந்தர் எனவும் அவரது வீட்டு கூரையில் சூரிய கலங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வீட்டின் வரவேற்பறையில் சென்ட்ரல் ஏசி பொருத்தப்பட்ட ஒரு ஆடம்பர வீடு எனுவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வந்தர்களாகவே திகழ்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் தற்பொழுது வாகனத்தில் பயணங்களை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் பிஎம்டபிள்யூ பென்ஸ் போன்ற ஆடம்பர வாகனங்களை பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அமைச்சர்கள் ஆடம்பர சொகுசு வீடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்பொழுது அமைச்சர்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளனர் அவர்கள் அவர்களின் பலருக்கு தொப்பை போட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கேலிச்சித்திரங்களில் நாங்கள் பார்க்கும் கேலிச்சித்திர பாத்திரங்கள் போன்று தற்பொழுது அமைச்சர்களின் வயிறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நாடு அநுரவிற்கு என்ற தொனிப்பொருளை மையப்படுத்தி மக்கள் அநுரவிடம் இந்த நாட்டை வழங்கினார்கள் எனவும் தற்பொழுது அநுரவிடம் உள்ளவர்கள் இந்த நாட்டை அனுபவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நாடு வறுமை நிலையில் காணப்படுவதாக காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam