கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள சில வீடுகள் மீது தாக்குதல்
கொழும்பின் புறநகர் பகுதியான மட்டக்குளியவில் நேற்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில் தப்பியவரின் தரப்பில் இருந்து சென்றவர்கள் 4 வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக, பாதிக்கப்பட்ட குழுவினர் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட அலிவத்தை பகுதியில் உள்ள பல வீடுகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு
குறித்த துப்பாக்கி சூடு தமது தரப்பிலிருந்து இடம்பெற்றதாக கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சம்பவத்தை எதிர்கொண்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5.50 மணியளவில் மட்டக்குளி அலிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு ஸ்கூட்டரில் வந்த இருவர் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அஷான் மதுரங்க என்ற 24 வயதுடைய இளைஞனே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போதிலும் அவர் தனது உயிரைக் காப்பாற்றி கொண்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
