அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், ஆறு பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும், தன்னைத்தானே சுட்டுக்கொண்ட காயத்துடன் இறந்து கிடந்தார் என்று அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 பேர் பலி
பாதிக்கப்பட்டவர்கள், மஸ்கடைனைச் சேர்ந்த 52 வயதான ரியான் வில்லிஸ் மெக்ஃபார்லேண்ட் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் என்று நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம்(1) துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் ஒரு வீட்டிற்குச் சென்றபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நான்கு பேரைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.