தெஹிவளையில் நள்ளிரவில் நடந்த சம்பவம் - கடையொன்றுக்குள் கொல்லப்பட்ட நபர்
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஹுவல, சரனங்கர வீதியிலுள்ள கடையொன்றுக்குள் புகுந்து, நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
43 வயதுடைய கடையின் உரிமையாளரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி சூடு
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. கொலையாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
